Thursday 2 October 2014

விலை உயர்வு!-தட்கல்-ரெயில்-டிக்கட்! இந்தியன் ரெயில்வே!!

தட்கல் ரெயில் டிக்கெட் விலை மேலும் உயர்வு: இன்று முதல் அமல்
இந்தியாவில் ஓடும் ரெயில்களில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரம் இருக்கை–படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 71 ஆயிரம் இருக்கை, படுக்கை வசதிகள் தட்கல் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2677 ரெயில்களில் இது நடைமுறை படுத்தப்படுகிறது. தட்கல் திட்டம் மூலம் ரெயில்வேக்கு ஆண்டு தோறும் ரூ.1000 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை மேலும் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்துள்ளது. அதன்படி பிரீமியம் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பண்டிகை காலங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கட்டண வருவாய் அதிகரித் துள்ளது. இந்த நிலையில் நாடெங்கும் ஓடும் 80 ரெயில்களின் தட்கல் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தசரா, தீபாவளி பண்டிகை கால தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை ரெயில்வே இலாகா எடுத்துள்ளது.இந்தியா முழுவதும் ரெயில்வே 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 5 ரெயில்கள் வீதம் மொத்தம் 80 ரெயில்களில் இன்று தட்கல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 80 ரெயில்களிலும் மொத்தம் உள்ள தட்கல் டிக்கெட்களில் 50 சதவீத டிக்கெட்கள் வழக்கமான தட்கல் நடைமுறையில் கொடுக்கப்படும். மீதமுள்ள 50 சதவீத தட்கல் டிக்கெட்கள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்படும். இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ரெயில்வேக்கு கணிசமாக கூடுதல் வருவாய் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.