Sunday 5 October 2014

பிரிமியம் ரயில் திட்டம் ஏன்?: டைனமிக் கட்டணம்-என்ன?

                        கூட்ட நெரிசலை சமாளிக்க என ரயில்வேயால் காரணம் கூறப்பட்டாலும், வருவாயைப் பெருக்கிக் கொள்ள ஏதுவாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு திட்டம்தான் இந்த பிரிமியம் ரயில்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சோதனை முயற்சியாக இயக்கப்பட்ட பிரிமியம் ரயிலுக்கு மக்களிடம் வரவேற்பிருக்க, பின் நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. விடுமுறை மற்றும் பண்டிகைக்காலங்களில் இயக்கப்படும் இந்த பிரிமியம் ரயில்களுக்கான முன்பதிவு காலம், 15 நாட்களுக்கு மிகாமல் இருக்கும். ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக மட்டுமே இவ்வகை ரயில்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலைய கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய முடியாது. முன்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ஐ.பி முகவரிக்குட்பட்ட கணினியில் இருமுறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தட்கல் கட்டணத்துடன், டைனமிக் முறை என்ற அடிப்படையில், காலியாக உள்ள டிக்கெட்களின் எண்ணிக்கை மற்றும் தேவையைப் பொறுத்து ரயில் கட்டணம் வெகுவாக உயர்ந்துகொண்டே இருக்கும். மேலும், பிரிமியம் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் முறை கிடையாது. பயணச்சீட்டை ரத்து செய்தாலும், கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. மேலும், முதியோருக்கான கட்டண சலுகை உட்பட எந்த சலுகைகளும் பிரிமியம் ரயில்களில் கிடையாது. இதுதவிர, மற்ற ரயில்களில் உள்ளதை போன்ற பொதுப்பெட்டி எனப்படும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் பிரிமியம் ரயில்களில் இடம்பெறாது. பிரிமியம் ரயில்களில் வசூலிக்கப்படும் இந்த டைனமிக் கட்டண முறைப்படிதான், பல ஆண்டுகளாக விமான டிக்கெட்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

பிரிமியம் ரயில் திட்டம் ஏன்?: டைனமிக் கட்டணம் என்றால் என்ன?

CHEAP TRAIN TICKET BUS TICKET FLIGHT TICKET BOOKING

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.