Sunday 5 October 2014

கட்டண கொள்ளை! இந்தியன் இரயில்வே-மக்கள் அதிர்ச்சி!

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் -ரெயில்வே துறை!
சென்னை-நெல்லைக்கு பிரிமியம் ரெயில் கட்டணம் 5 மடங்கு உயர்வு
 பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 05, 11:45 AM IST

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 20–ந்தேதி செல்லும் பிரிமியம் சிறப்பு ரெயிலுக்கு இன்று முன்பதிவு தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய இந்த ரெயிலுக்கு 30 நிமிடங்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமான ரெயில்களில் ரூ.380 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பிரிமியம் சிறப்பு ரெயிலில் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளது.இதே போல 3 அடுக்கு ஏ.சி. படுக்கை வசதிக்கு 1000 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆம்னி பஸ்களை விட பிரிமியம் ரெயில்களில் கட்டண கொள்ளை நடைபெறுவதால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

          இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘சாதாரண, நடுத்தர மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணத்தை பெரிதும் நம்புகிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விடப்படும் சிறப்பு ரெயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் வகையில் தற்போது ரெயில்வே துறை லாப நோக்கத்தை கருத்தில் கொண்டு சாதாரண சிறப்பு ரெயிலுக்கு பதிலாக பிரிமியம் சிறப்பு ரெயில்களை விடுகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.