Sunday 5 October 2014

பிரிமியம் பெயரில் பகல் கொள்ளை!- மைனமிக் கொள்ளை!

மத்தியில் புதிதாக பா.ஜ.ஆட்சி அமைந்தவுடன் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பிரிமியம் என்ற பெயரில் புதிதாக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். பிரிமியம் ரயிலில் சாதாரண ரெயில் கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, பிரிமியம் ரயிலுக்கான டிக்கெட் கவுண்டர்களில் வழங்கப்படாது. ஆன்லைனில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் மட்டுமே எடுக்க முடியும். ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியதும் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பின்னர் டிக்கெட் விற்க, விற்க டிக்கெட் கட்டணம் உயர்ந்து கொண்டே கொண்டே போகும். அதாவது, ஏலம் எடுப்பது போன்று கட்டணங்கள் அதிகரிப்பது வழக்கம்.

சாதாரணமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 2ம் வகுப்பு சிலிப்பர் கிளாஸ் பெட்டியில்  385 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பிரிமியம் சிறப்பு ரயிலில் 5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதாவது, நேற்று டிக்கெட் சுமார் 2 ஆயிரம் வரை விற்பனையானது. இதே போல 3 அடுக்கு ஏ.சி. படுக்கை வசதிக்கு 1000க்கு பதிலாக 4,000 வரை வசூலிக்கப்பட்டது. 2 அடுக்கு ஏ.சி.படுக்கை வசதிக்கு  1,410 கட்டணம் ஆனால், 5,000 வரை விற்கப்பட்டது. இதே போல, கோவைக்கு இயக்கப்பட்ட ரயிலிலும் சுமார் 5 மடங்கு வரை கட்டணம் அதிகமாக இருந்தது. இந்த டிக்கெட் கட்டணம் சாதாரண மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இது மட்டுமல்லாமல் இண்டெர்நெட் மையங்களில் டிக்கெட் எடுக்க சர்வீஸ் கட்டணமாக 50 முதல்  100 வரை வசூலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.